நாங்கள் தயாரித்த காண்போம் கற்போம் கையேட்டுடன் காட்சிக்கூடங்களில் உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இந்தக் கையேடு, முதல் மாடியில் உள்ள வருகையாளர் சேவை முகப்பில் கிடைக்கும்.
தொடக்கப்பள்ளி கீழ்நிலை வகுப்பு மாணவர்களுக்குத் கையேடு ஆங்கிலத்தில் உள்ளன. இளம் வருகையாளர்கள் காட்சிப் பொருட்களை ஆராய ஊக்கமளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளும் புதிர்களும் கையேடுகளில் உள்ளன.
எங்களது பொக்கிஷக் குவியலில் உள்ள நகைகளின் கண்ணைக்கவரும் படங்களையும், மாணவர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த சுயவிடை பகுதிகளையும் கையேட்டில் சேர்த்திருக்கிறோம்.
பதிவிறக்கம் செய்கநாங்கள் தயாரித்த காண்போம் கற்போம் கையேட்டுடன் காட்சிக்கூடங்களில் உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இந்தக் கையேடு, முதல் மாடியில் உள்ள வருகையாளர் சேவை முகப்பில் கிடைக்கும்.
தொடக்கப்பள்ளி மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்குத் கையேடுகள் தமிழில் கிடைக்கும். இளம் வருகையாளர்கள் காட்சிப் பொருட்களை ஆராய ஊக்கமளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளும் புதிர்களும் கையேடுகளில் உள்ளன.
எங்களது பொக்கிஷக் குவியலில் உள்ள நகைகளின் கண்ணைக்கவரும் படங்களையும், மாணவர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த சுயவிடை பகுதிகளையும் கையேட்டில் சேர்த்திருக்கிறோம்.
வண்ணம் தீட்டுங்கள்! எங்கள் அரும்பொருளகத்தில் உள்ள நேர்த்தியான நகைகள், அன்றாட சமையலறை பொருட்கள் ஆகியவற்றை வண்ணம் தீட்டும் தாட்களில் அச்சிட்டிருக்கிறோம். லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள கடைவீடுகளும் உள்ளது. “எங்கள் திரட்டுக்கு வண்ணம் தீட்டுங்கள்” என்ற தலைப்பிலான இந்த நடவடிக்கை, 10 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுவர்களுக்குப் பொருத்தமானது. அரும்பொருளகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் மரபுடைமையையும் கலாசாரத்தையும் இந்நடவடிக்கை வலியுறுத்துகிறது.
ஐந்து முதல் 10 வயதுடைய சிறுவர்களும் இந்நடவடிக்கையில் ஈடுபடலாம். அவர்கள் ஒரு சேலைக்கு வண்ணம் தீட்டலாம், காவடி செய்யலாம் அல்லது காட்சிக்கூடத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்று நபர்கள் பற்றி தனக்குத் தெரிந்தவற்றைச் சோதித்துப் பார்க்கலாம்.
பூமாலை கட்டுவோர், நகைக் கடைகள், உணவகங்கள், கோயில்கள் எனப் பலவும் நிறைந்திருக்கும் லிட்டில் இந்தியா வட்டாரம் உண்மையாகவே ஐம்புலனுக்கும் அரும் விருந்து. இந்த மரபுடைமை பாதையில் நமக்குத் துணைவரும் கையேடு, கலாசார அம்சங்கள் நிறைந்த இந்த வட்டாரத்தின் முக்கிய அடையாளச் சின்னங்களைச் சுட்டிக்காட்டி, வியப்பூட்டும் ஐந்தடிப் பாதைகளில் சிறுவர்களுக்கு வழிகாட்ட உதவும்.
பதிவிறக்கம் செய்கஎங்களோடு விளையாட வாருங்கள்! பண்டைக்கால விளையாட்டுகளை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த, பலவகையான பாரம்பரிய இந்திய விளையாட்டுகளை நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம். உங்கள் வீட்டில் இருந்தபடியே எங்களது நடவடிக்கை கையேடுகளைப் பதிவிறக்கம் செய்தும், காணொளிகளைப் பார்த்தும், விளையாட்டை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். உங்கள் பிள்ளைகளுடன் வீட்டில் அல்லது உங்கள் மாணவர்களுடன் பள்ளியில், மரபுடைமையில் ஈடுபட்டு விளையாடி மகிழலாம்.
எடுத்துக்காட்டாக, பண்டைக்காலப் பல்லாங்குழி விளையாட்டை நீங்களே சொந்தமாகத் தயாரிக்கலாம். இதற்குத் தேவையானவை முட்டை வைக்கும் குழிப்பெட்டி, சாயங்கள், பாசிமணிகள், அதோடு எளிய வழிகாட்டலுக்கு எங்களது DIY காணொளி. சதுரங்க விளையாட்டைப் போல், பண்டைக்காலப் பல்லாங்குழி விளையாட்டுக்கும் கணக்குத் திறனும் கூர்ந்த சிந்தனையும் தேவைப்படும்.
உங்கள் குடும்பத்திற்காக நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள விளையாட்டுகளின் முழுப் பட்டியல்:
பொங்கல் திருநாளில், பால், ஏலக்காய், சர்க்கரையுடன் புதிதாக அறுவடை செய்த அரிசியுடன் பானை நிறைய பொங்கல் சமைப்போம். பால் பொங்கி வழியும் தருணம் – எதிர்வரும் ஆண்டு வளமாகவும் செழிப்பாகவும் இருக்கும் என்பதன் அடையாளம்.
இந்த அறுவடைத் திருநாளில், செழிப்பான அறுவடைக்கு ஆசிபுரிந்த பூமித்தாய்க்கு நன்றி தெரிவிப்போம். மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பூமாலைகள் அணிவித்து அலங்கரிப்போம்.
இந்தப் பொங்கல் திருநாளைப் பற்றி பின்வரும் வளங்களுடன் மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
பொங்கல் 2023 வளங்கள்:
- பொங்கல் இணையவாசல் (தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது; ஆங்கிலத்திலும் தமிழிலும் கிடைக்கும்)
- வண்ணம் தீட்டும் தாள்
- புதிர்ப்பாதை
- நடவடிக்கை தாள்
- சொல் தேடல்
- எண்களைத் தெரிந்துகொள்
- படத்துடன் சொல்லை இணை
எங்களது சிறப்பு நடவடிக்கை தொகுப்புடன் உங்களது கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் இந்திய மரபுடைமையைக் கலந்திடுங்கள்.
நீங்கள் மருதாணி கலைவடிவ வாழ்த்து அட்டைகளை வடிவமைக்கலாம், பரிசுப்பொருட்களின் மடிப்புத்தாளுக்கு வண்ணம் தீட்டலாம், தாமரை, மயில் போன்ற பிரபலமான இந்தியச் சின்னங்களுடன் கிறிஸ்மஸ் அலங்கரிப்புப் பொருட்களையும் செய்யலாம்.
எங்களோடு சேர்ந்து விழாக்காலக் குதூகலத்தைப் பரப்பலாம்!
பதிவிறக்கம் செய்ககேளிக்கையான முறையில் தகவல் அளிக்கும் எங்களது இன நல்லிணக்க நாள் பட்டியலுடன் சிங்கப்பூரின் முக்கிய இனப் பிரிவுகள், சமயச் சார்புள்ள கொண்டாட்டங்கள் பற்றி குறுகிய நேரத்தில் தெரிந்து கொண்டு, உங்கள் பள்ளியின் இன நல்லிணக்க நாள் கொண்டாட்டத்தைப் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.
மலாய் மரபுடைமை நிலையம், சுன் யாட் சென் நன்யாங் நினைவு மண்டபம், இந்திய மரபுடைமை நிலையக் குழுக்கள் ஆகியவை இணைந்து தயாரித்த இந்தக் கல்வித் தொகுப்பில், எங்களிடம் உள்ள திரட்டுகள், கண்காட்சிகள் பற்றி உள்ளடக்கமும் இடம்பெற்றுள்ளது.
கருத்தைக் கவரும் காணொளிகளின் எளிய உரைநடைகளுடன், நமது இந்திய, மலாய், சீன சமூகங்களைப் பற்றிய சுவாரசியமான விவரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
நீங்களே சொந்தமாக நோன்புப் பெருநாள் பலகாரம் தயாரிக்கவும், ரங்கோலி கோலம் வரையவும், சீனத் தெருக்கூத்து முகமூடிகள் செய்யவும் வழிகாட்டும் காணொளிகளும் இத்தொகுப்பில் உள்ளடங்குகின்றன.
பதிவிறக்கம் செய்க