வழிகாட்டிச் சுற்றுலாக்கள்
மேல்விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!நாங்கள் நடத்தும் இலவச வழிகாட்டிச் சுற்றுலாக்களில் ஒன்றில் சேர்ந்து அக்காலத்திற்குப் பயணம் மேற்கொள்ளுங்கள். எங்கள் வழிகாட்டிகள் நுணுக்கமாக விவரமளித்து உங்களுக்கு வழிகாட்டுவார்கள். வழிகாட்டியின் துணையுடன், காட்சிக்கூடங்களுக்குத் தகவலளிக்கும் கல்வி ஆய்வுகள் பற்றியும் கலைப்பொருட்கள் பற்றியும் நீங்கள் மேலும் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மரபுடைமை நிலைய இலவச வழிகாட்டிச் சுற்றுலாவை முதலாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குங்கள் – அந்த நூற்றாண்டில்தான் தெற்காசியாவுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் முதன்முதலில் தொடர்பு ஏற்பட்டது; அதன்பிறகு, புலம்பெயர்ந்த இந்தியர்கள் தடம்பதித்த பல்வேறு கண்டங்களுக்கு எங்கள் வழிகாட்டி உங்களை எடுத்துச்செல்வார். நமது முன்னோடிகள், உள்ளூர் பெருந்தலைவர்கள் ஆகியோரின் தனிப்பட்ட கதைகளுடன் உங்கள் வருகையை நிறைவு செய்யுங்கள்.
நாங்கள் நடத்தும் வழிகாட்டிச் சுற்றுலா சுமார் 60 நிமிடம் நீடிக்கும். வருகையாளர்கள் எங்கள் காட்சிக்கூடங்களைச் சொந்தமாக ஆராயத் துணைபுரியும் வகையில் சுற்றுலா தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குழுவிலும் அதிகபட்சம் 15 வருகையாளர்கள் சேரலாம். சுற்றுலாவில் செல்ல, முதல் மாடியில் உள்ள வரவேற்பு முகப்பில் எங்களைச் சந்திக்க வாருங்கள்.
நாங்கள் நடத்தும் சுற்றுலாக்கள்
நிலையத்திற்கு வருவதற்குமுன், முகப்பு அலுவலருடன் தொடர்புகொண்டு அன்றைய சுற்றுலா கொள்ளளவு பற்றி முதலில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படும். விரைவில் சந்திப்போம்!
ஆங்கில வழிகாட்டிச் சுற்றுலாக்கள்நிரந்தரக் காட்சிக்கூடங்கள் | |
---|---|
செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை* | காலை 11.00 மணி |
வெள்ளிக்கிழமை | பிற்பகல் 2.00 மணி |
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை நாட்கள் | பிற்பகல் 2.00 மணி |
நிரந்தரக் காட்சிக்கூடங்கள் | |
---|---|
மாதத்தின் முதல் சனிக்கிழமை* | காலை 11.00 மணி |
நிரந்தரக் காட்சிக்கூடங்கள் | |
---|---|
மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை* | காலை 11.00 மணி |
நீங்கள் உங்கள் பள்ளியுடன் அல்லது அமைப்புடன் வருகைக்கு ஏற்பாடு செய்ய விரும்பினால், பள்ளி வருகைகள் மற்றும் குழுப் பதிவு பக்கங்களுக்குச் செல்லுங்கள்.