வருகையாளர் தகவல்கள்
உங்கள் வருகைக்குமுன் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய தகவல்கள்
சிங்கப்பூர் இந்தியக் கலாசாரத்தின் ஒரு மையமாகத் திகழ்கிறது இந்திய மரபுடைமை நிலையம். எங்களின் சமகால அரும்பொருளக வளாகத்திற்கு உங்களை வரவேற்று, நமது கதைகளைப் பகிர்ந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம். எங்கள் நிலையத்திற்கு வருகைதரும் அனைவருக்கும் இனிதான அனுபவமாக அமைவதை உறுதிப்படுத்த, பின்வரும் சில குறிப்புகளையும் வழிகாட்டிகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
அமைவிடமும் திறந்திருக்கும் நேரமும்முகவரி:5 கேம்பல் லேன், சிங்கப்பூர் 209924
தொலைபேசி எண்: 6291 1601
திறந்திருக்கும் நேரம்: செவ்வாய்க்கிழமை – ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை (கடைசி நுழைவு: மாலை 5.30 மணி)
*வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டாலொழிய, பொது விடுமுறை நாட்கள் உட்பட ஒவ்வொரு திங்கட்கிழமையும் நிலையம் மூடப்பட்டிருக்கும்.*
கூட்ட அளவைத் தெரிந்து கொள்ளுங்கள்அரும்பொருளகத்திற்கு வருகையளிக்க உகந்த நேரம் எது? அரும்பொருளகத்தில் இருக்கும் கூட்டத்தின் அளவை நாங்கள் உடனுக்குடன் நேரடியாக வெளியிடுகிறோம். அண்மை நிலவரம்:
வந்தடையும் வழிபேருந்து வழியாக
எங்கள் நிலையத்திற்கு ஆக அருகில் உள்ள இரண்டு பேருந்து நிறுத்தங்களிலும் நிற்கும் பேருந்து சேவைகள்:
பேருந்து நிறுத்தம் 07031:தேக்கா நிலையத்திற்கு முன்னால் சிராங்கூன் சாலையில்.
பேருந்து சேவைகள்: 23, 64, 65, 66, 67, 131, 139, 147, 857
பேருந்து நிறுத்தம் 07539 சிராங்கூன் சாலைக்குப் பிறகு சுங்காய் சாலையில்.
பேருந்து சேவைகள்: 48, 56, 57, 131, 166, 170, 640, 960, 980.
பெருவிரைவு இரயில் வழியாக
நீங்கள் இரயிலில் வருவதாக இருந்தால், லிட்டில் இந்தியா இரயில் நிலையத்தில் இறங்கி, வெளிவாயில் E வழியாக வெளியேறுங்கள்.
டாக்சியில் / காரில்
எங்கள் கட்டடத்தின் நுழைவாயில் கேம்பல் லேனில் அமைந்துள்ளது. ஆக அருகில் நிறுத்தும் இடம் கிளைவ் ஸ்திரீட்டில் உள்ளது. தேக்கா பிளேஸ், அப்பர் டிக்சன் சாலை, தேக்கா நிலையத்தின் கீழ்மாடி, சுற்றுவட்டார வீதியோரங்களில் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.
அரும்பொருளகப் பண்பாடுஎங்கள் நிலையத்திற்கு வருகை தருவதற்குமுன் பொதுவான அரும்பொருளகப் பண்பாடுகளைப் புரிந்துகொள்வது முக்கியம். உங்கள் அனுபவம் மகிழ்ச்சியாகவும் பயன்மிக்கதாகவும் அமைவதை இது உறுதிப்படுத்தும்.
எடுத்துக்காட்டாக, எங்கள் காட்சிக்கூடங்களில் உணவும் பாணமும் அனுமதிக்கப்படாது என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும் எங்கள் காட்சிக்கூடங்களை அமைதியாக வலம் வருமாறு வருகையாளர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
இந்தக் காணொளியைப் பார்த்து, எங்களது வழிகாட்டுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்!