இது எளிமையான ஒரு விளையாட்டு. பகடைக்காயை உருட்டி, சக போட்டியாளர்களைக் கடந்து சென்று, கடைசிக் கட்டத்தை முதலில் எட்டவேண்டும். பாம்பு இருக்கும் கட்டத்திற்குள் சென்றால், அதில் சறுக்கி கீழே செல்லவேண்டும். இதுதான் பரமபதம். கேட்பதற்குச் சாதாரணமான விளையாட்டாகத் தோன்றுகிறதல்லவா?
ஆனால், இந்த அட்டைப்பலகை விளையாட்டில் ஆழ்ந்த அர்த்தமுள்ள கதை ஒன்று புதைந்திருக்கிறது – நல்லதையும் கெட்டதையும் பற்றிய கதை. பண்டைக்கால இந்தியாவில் தோன்றியதாக நம்பப்படும் இந்த விளையாட்டில் உள்ள பாம்புகள் பாவத்தையும், ஏணிகள் நற்செயல்களையும் குறிக்கின்றன. விளையாட்டாளர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் ஞானம் அடைவதற்காக எடுத்து வைக்கப்படுபவை.
தமிழில் பரமபத சொப்பணம் என்றும் அறியப்படும் இந்த விளையாட்டு, எங்களிடம் இரவலாகக் கிடைக்கும் பாரம்பரிய இந்திய விளையாட்டுகளில் ஒன்று.
முழுப் பட்டியல் இதோ:
- பரமபத சொப்பணம்
- பல்லாங்குழி
- பம்பரம்
- கட்டம் விளையாட்டு
- ஆடு புலி ஆட்டம்
- சதுரங்கம்
இந்த விளையாட்டுகள் தோன்றிய கதைகளும், விளையாட்டு முறையும் இடம்பெறும் சாலைக்காட்சி பதாகைகளை இரவலாகப் பெறுவதற்கும் நீங்கள் முன்பதிவு செய்யலாம்.
பதிவு படிவம்சிங்கப்பூரில் பல்வேறு தெற்காசிய சமூகங்கள் வாழ்கின்றன. அந்தச் சமூகங்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவை.
இருந்தாலும், அவர்களது புலம்பெயர்வு வரலாறும் சிங்கப்பூரில் வேரூன்றிய கூட்டு அனுபவமும் பொதுவான ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ளன. பல்வேறு இந்தியச் சமூகங்களின் தனித்துவமான கலாசாரப் பழக்கங்களில் இதைக் காணலாம்.
ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. புலம்பெயர்ந்த சமூகங்களின் கலாசாரப் பழக்கங்களின் பரிமாற்றம், நடைமுறைகள், மறுவிளக்கம் ஆகியவற்றைக் கண்காட்சி ஆராய்கிறது.
பதிவு படிவம்பாரம்பரிய கர்நாடக இசையின் வசீகரிக்கும் மெட்டுகளை எங்களது சமூக நிகழ்ச்சிகளில் ஒன்றில் நீங்கள் கேட்டிருக்கலாம். தபேலா, சித்தார் போன்ற இசைக்கருவிகளைப் பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
இதுபோன்ற பாரம்பரியங்களைப் பற்றி உங்களுடன் அதிகமாகப் பகிர விரும்புகிறோம்! இந்த சாலைக்காட்சி, நமது பன்மய இந்தியச் சமூகங்களின் இசை, கைவினைப்பொருட்கள், விளையாட்டுகள், உணவு, வணிகம் அனைத்தையும் ஆராய்கிறது.
பதிவு படிவம்பரமபத சொப்பணம், பல்லாங்குழி, பம்பரம் போன்ற பாரம்பரிய இந்திய விளையாட்டுகள் தலைமுறை தலைமுறையாக எவ்வாறு காக்கப்பட்டு வந்துள்ளன என்பதையும் எப்படியெல்லாம் பயன்படுகின்றன என்பதையும் இந்த நடமாடும் கண்காட்சி விவரிக்கிறது.
சில விளையாட்டுகள் பொழுதுபோக்காகவும் சிறுவர்கள் கூடி விளையாடுவதற்காகவும் பயன்படுகின்றன. மற்றவை விளையாட்டாளரின் கூர்ந்த சிந்தனை, உள ஆற்றல், எண்கணக்கு போன்ற திறன்களைச் சோதிக்கவும் வளர்க்கவும் துணை புரிகின்றன.
பதிவு படிவம்