குழுப் பதிவு
நமது மக்களுக்காக, நமது சேவை
சிங்கப்பூருக்கு வந்த முதல் இந்தியர்களில் டீக்கடைக்காரர்கள், வண்ணான்கள், சிப்பாய்கள் உள்ளடங்குவர். இவர்களைத் தொடர்ந்து, கட்டடம் கட்டுபவர்களும் தொழிலதிபர்களும் வரத் தொடங்கினார்கள். இவர்களில் பலரும் சிங்கப்பூரிலேயே வேரூன்றினார்கள். அவர்களின் பழக்கங்கள், கைத்திறன்கள், வணிகங்கள், பாரம்பரியங்கள் அனைத்தும் நமது சமூக இழையில் ஐக்கியமாகிவிட்டது.
எண்ணற்றத் தனிமனிதர்கள், அமைப்புகள் ஆகியோரின் பங்களிப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட எங்களின் மக்கள் சார்ந்த காட்சிக்கூடங்கள், இந்தப் பன்மயக் கருப்பொருளைப் பிரதிபலிக்கின்றன.
எனவே, உங்கள் நண்பர்கள், குடும்பத்தார் மற்றும்/அல்லது சக ஊழியர்களை ஒன்றுகூடி குழுச் சுற்றுலா மேற்கொள்ள வாருங்கள்! உங்கள் குழுவில் 15 பேருக்கு மேல் இருந்தால், முன்கூட்டியே பதிவு செய்யுங்கள்.
உங்கள் குழுவினர் கட்டணமுள்ள வழிகாட்டிச் சுற்றுலாவில் செல்லலாம் அல்லது சொந்தமாக எங்கள் நிலையத்தைச் சுற்றிப் பார்க்கலாம்.
வழிகாட்டிச் சுற்றுலாக்கள்நிறுவனங்களும் அமைப்புகளும் தனிப்பட்ட வழிகாட்டிச் சுற்றுலாக்களுக்கு முன்பதிவு செய்யலாம். வழிகாட்டிகள் இருப்பதைப் பொறுத்து பதிவுகள் ஏற்கப்படும். ஒவ்வொரு சுற்றுலாவும் சுமார் 60 நிமிடம் நீடிக்கும். நிறுவனக் குழுக்கள், லாப நோக்கற்ற அமைப்புகள், அரசாங்க அமைப்புகள் ஆகியவை ஒரு வழிகாட்டிக்கு $150 கட்டணம் செலுத்தவேண்டும். சமூகநல அமைப்புகள் போன்றவற்றுக்குச் சுற்றுலாக்கள் இலவசம்.
சொந்தமாகச் சுற்றிப்பார்க்கும் குழு வருகை
உங்கள் குழுவினருடன் எங்கள் நிலையத்தை நீங்கள் சொந்தமாகச் சுற்றிப் பார்க்கலாம்! உங்கள் வருகைக்காக நாங்கள் முன்கூட்டியே தயார்ப்படுத்தி இருக்கிறோம். எங்கள் காட்சிக்கூடங்களில் பெரிய இருவழித்தொடர்பு அனுபவங்கள், 20க்கும் மேற்பட்ட தொடுதிரைகள், பல்வேறு உண்மைத்தோற்ற ஒளியமைப்பு (AR) அனுபவங்கள் உள்ளன.
இசை, குறும்படங்கள், தனிப்பட்ட மெய்நிகர் வழிகாட்டிகள் ஆகியவை, உங்கள் அனுபவத்தை முழுமைப்படுத்தும்.
நீங்கள் நிலையத்தை வந்தடைந்தவுடன் முதல் மாடியில் உள்ள வருகையாளர் சேவை முகப்பிலிருந்து AR ஒலியியக்க வழிகாட்டி ஒன்றைப் பெற்றுக் கொள்ளுங்கள். எங்களது கையடக்கச் சாதனங்களை நீங்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம்.
குழு வருகைக்குப் பதிவு செய்யுங்கள்குழுப் பதிவுகள் அனைத்தும் குறைந்தது 6 வாரத்திற்கு முன்னதாகச் சமர்ப்பிக்கப்படவேண்டும். குழுப் பதிவு செய்ய, தயவுசெய்து இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.
மேல்விவரங்களுக்கு, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் குழுப் பதிவுகள் பகுதியைப் படித்துப் பாருங்கள்.
நீங்கள் ஓர் கல்விக் கழகத்தின் சார்பில் இங்கு வந்திருந்தால், இந்தப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.