இந்திய மரபுடைமை நிலையம் “Sojourners to Settlers: Tamils in Southeast Asia and Singapore (ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்)” நூலின் தமிழ்ப் பதிப்பை, 1 மே 2021 அன்று தமிழில் நடத்தப்பட்ட “ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர் மின்னிலக்க மாநாட்டில்” வெளியிட்டது. இரண்டு தொகுதிகள் கொண்ட இந்நூலை, இந்திய மரபுடைமை நிலையமும் கொள்கை ஆய்வுக் கழகமும் கூட்டாக வெளியிட்டன. தமிழர் வட்டாரங்களுக்கும் தென்கிழக்கு ஆசிய அரசாட்சிகளுக்கும் இடையே நவீன காலத்திற்குமுன் நிலவிய தொடர்புகளையும், நவீனகால சிங்கப்பூரில் தமிழர் வரலாறு, பன்மயம் பற்றிய அறியப்படாத கூறுகளையும் இந்நூல் ஆராய்கிறது. தொல்பொருள் ஆய்வாளர்கள், கலை வரலாற்று வல்லுநர்கள், வரலாற்று வல்லுநர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் புனைந்த 27 அத்தியாயங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தென்கிழக்கு ஆசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழரின் வரலாறு குறித்த புதிய ஆய்வுகளையும் கருத்துகளையும் இந்நூல் தெரிவிக்கிறது.
உங்கள் பிரதிக்கு Read A Book நாடுங்கள்.
விலை: SGD 40 (பொருள், சேவை வரிக்கு முன்)
ISBN: 9789811812408
தொகுப்பாசிரியர்கள்: அருண் மகிழ்நன், நளினா கோபால்
மொழி: தமிழ்
வடிவம்: அச்சிடப்பட்டது அல்லது eBook-DRM
பக்கங்கள்: 460
வெளியீட்டுத் தேதி: 2021
சின்னங்களும் எழுத்துருக்களும்: கைவினையின் மொழி என்ற தலைப்பிலான கண்காட்சியை முன்னிட்டு, இந்திய மரபுடைமை நிலையம் “சொல்லும் சின்னமும்: கலையிலும் சமூகத்திலும்” என்ற தலைப்பிலான மாநாட்டை 3 மார்ச் 2018ல் நடத்தியது. இந்தியக் கைவினைஞர்கள் பூர்வீக அறிவுக்கூர்மையையும் கலைத்திறனையும் ஒன்றிணைத்து இந்தியப் பாரம்பரியங்களின் காப்பாளர்களாகச் செயல்படுகிறார்கள் என்பதன் அடிப்படையில் கண்காட்சியும் மாநாடும் நடத்தப்பட்டன. பல நூற்றாண்டுகளாகச் சொல்லைச் சின்னமாகவும் சின்னத்தைச் சொல்லாகவும் பயன்படுத்திய கைவினைஞருக்கு, எழுத்துருக்களும் சின்னங்களும் இரட்டிப்புத் தூண்டுகோல்களாக இருந்து வருவதை இந்த நூல் வலியுறுத்துகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் இந்தியச் சமூகங்களிலும், உலகெங்கிலும் புலம்பெயர்ந்த மக்களிடையிலும் கைவினைப் பொருட்கள் கலாசாரப் பயன்பாட்டுப் பொருட்களாக நெடுங்காலம் நீடித்து வருகின்றன. புலம்பெயர்ந்த மக்களின் பிள்ளைகளான நமக்கு, வளமான இந்திய மரபுடைமையின் மரபை இந்தக் கட்டுரைகள் நினைவுபடுத்தி, பூர்வீகத்துடன் நம்மை இணைக்கின்றன.
உங்கள் பிரதிக்கு Read A Book நாடுங்கள்.
விலை: 40 SGD (பொருள், சேவை வரிக்கு முன்)
ISBN: 9789811812729
தொகுப்பாளர்: இந்திய மரபுடைமை நிலையம்
மொழி: ஆங்கிலம்
வடிவம்: eBook-DRM
பக்கங்கள்: 216
வெளியீட்டுத் தேதி: 2022