இந்திய மரபுடைமை நிலையம், சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் செழிப்புமிக்கப் பன்மயக் கலாசாரத்தை எடுத்துரைக்க, அதன் நிரந்தரக் காட்சிக்கூடத்திற்கும் சிறப்புக் கண்காட்சிகளுக்கும் துணையாகப் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வெளியீட்டையும் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, கீழ் காணும் வலைத்தளங்களுக்கு செல்லுங்கள்.
சிங்கப்பூர் இந்திய மரபுடைமை
“சிங்கப்பூர் இந்திய மரபுடைமை” நூல், கல்வி ஆய்வுகளுடன் நிலையத்தின் 300க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள், புகைப்படங்கள், ஆவணங்கள் ஆகியவற்றின் பட்டியலும் உள்ளடங்கிய 556 பக்க வெளியீடாகும். இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளும் புகைப்படங்களும், காலனித்துவ ஆட்சிக்கு முந்திய காலத்திலிருந்து சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தினரின் வாழ்க்கைப் பயணத்தையும், நாட்டு நிர்மாணத்தில் அவர்களின் பங்களிப்பையும், நிகழ்காலச் சூழலையும் விவரிக்கின்றன.
உங்கள் பிரதியை நிலையத்தின் கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்.
விலை: SGD 50 (பொருள் சேவை வரிக்கு முன்)
ISBN: 9789811135095
தொகுப்பாசிரியர்கள்: ராஜேஷ் ராய், ஏ. மணி
மொழி: ஆங்கிலம்
வடிவம்: அச்சிடப்பட்ட புத்தகம்
பக்கங்கள்: 556
வெளியீட்டுத் தேதி: 2017