- முகப்பு
- கற்றல்
- கற்றல் வளங்கள்
எங்கள் பட்டியலை ஆராய்ந்து, மரபுடைமையை அனுபவித்துப் பாருங்கள்!
கற்றலுக்கு என்றுமே முடிவில்லை! பாலர் பள்ளி முதல் தொடக்கப்பள்ளி வரை பயிலும் சிறுவர்கள் இணையத்திலும் நேரிலும் கற்றுக்கொள்ளத் துணைபுரியும் வளங்களை நாங்கள் தயாரித்து வழங்குகிறோம்.
நீங்கள் எளிதில் தேடிப்பார்க்க, மூன்று பிரிவுகளாக வளங்களை வகைப்படுத்தி இருக்கிறோம்: இந்திய மரபுடைமை நிலையம் தொடர்பான உள்ளடக்கம், விழாக்கள் மற்றும் நாடளாவியக் கொண்டாட்டங்கள்.
காணொளிகள், நடவடிக்கை தொகுப்புகள், கற்றல் தொகுப்புகள் எனப் பலவற்றிலிருந்து உங்களுக்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுங்கள். சின்னஞ்சிறுசுகளுடன் கேளிக்கையாக நேரம் செலவிட்டு, எங்களது பட்டியல் பற்றி பிறருடன் பகிருங்கள்!
தீபாவளித் திருநாளன்று உலகெங்கிலும் வாழும் இந்துக்களின் வீடுகளில் அகல் விளக்குகள் சுடரொளி வீசும். சிங்கப்பூரிலும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணலாம். தீமையை அழித்து நல்லன வெற்றி அடைந்ததைக் கொண்டாடும் குடும்பங்கள், வீடெங்கும் விளக்கேற்றி, மாவிலைத் தோரணம் கட்டி, வாசலில் ரங்கோலி கோலம் வரைவார்கள்.
நீங்களும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெறலாம். உங்களுக்காகக் கேளிக்கையான எளிய தகவல்களைத் தொகுத்திருக்கிறோம்.
சிறுவர் முதல் முதியவர் வரை ஈடுபடக்கூடிய தீபாவளி கைவினைப்பொருள் நடவடிக்கைகளும் உள்ளன. உப்பு மாவில் செய்யும் கைவிளக்குகள், தீபாவளிக்கான அன்பளிப்புப் பைகள், ரங்கோலி கோல வடிவங்கள் போன்றவை இதில் உள்ளடங்கும். உங்களுக்குப் பிடித்ததை நீங்களே தேர்ந்தெடுங்கள்!
பொருத்தமான எதுவும் கிடைக்கவில்லை
மன்னிக்கவும், நீங்கள் தேடும் பக்கத்தைக் காணவில்லை
வேறு ஒன்றை தேடவும்