பொங்கல் பாரம்பரியமாக மண் சட்டியில் அல்லது பித்தளை பாத்திரத்தில் சமைக்கப்படும்.
சிங்கப்பூரில் இரண்டு வகையான பொங்கல் செய்வார்கள் – இனிப்புப் பொங்கல், காரச்சுவை பொங்கல். சர்க்கரைப் பொங்கல் இனிப்பாக இருக்கும். வெண் பொங்கல் காரச்சுவையுடன் இருக்கும். அதைப் பெரும்பாலும் காலை உணவாகப் பரிமாறுவார்கள்.
பொங்கலை பல வழிகளில் சமைக்கலாம். பொங்கல் சமைக்க அரிசி, திராட்சை, ஏலக்காய், பருப்பு, நெய், பால், வெல்லம், முந்திரிப்பருப்பு தேவைப்படும்.
பால் பொங்கி பானைக்கு வெளியே வழியும்போது, குடும்பத்தினர் சுற்றிலும் கூடி நின்று, “பொங்கலோ பொங்கல்!” எனக் குரல் எழுப்புவார்கள்.
பானைக்குள் என்ன இருக்கிறது?