கீழே இருக்கும் நடனச் சின்னங்களை அழுத்தி, பல்வேறு பாரம்பரிய இந்தியக் கிராமிய நடனங்களைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
மயிலாட்டக் கலைஞர்கள் தலை முதல் பாதம் வரை மயிலைப் போல ஆடை அணிந்து, மயிலைப் போல நளினமான அசைவுகளுடன் நடனம் ஆடுவார்கள்.
கரகாட்டம் ஒரு வகையான பண்டைக் காலத்து கிராமிய நடனம். பெண்கள் தலையில் கரகத்தைச் சுமந்து கொண்டு, கரகம் கீழே விழாமல் நளினமாக ஆடுவார்கள்.
நாட்டியக்காரர்கள் ஒவ்வொரு கையிலும் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு கோலாட்டம் ஆடுவார்கள். மெட்டுக்கு ஏற்ப வட்ட வடிவில் அசைந்தாடிக் கொண்டே குச்சிகளைத் தட்டுவார்கள். அந்த ஓசையே நடன அசைவின் மெட்டாக அமையும். இதுவே கோலாட்டத்தை மற்ற வகை நடனங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் சிறப்பு அம்சமாகும்.
வெகு அழகாக அலங்கரிக்கப்பட்ட அட்டைக் குதிரையே இந்த நடனத்தின் முக்கிய அங்கம். நாட்டியக்காரர் அட்டைக் குதிரையை ஆடையாக அணிந்திருப்பார். குதிரைக்கு உள்ளே உள்ள ஓட்டைகளுக்குள் புகுந்து நாட்டியக்காரர் ஆடும்போது, குதிரை மீது சவாரி செய்வது போலத் தோன்றும்.