சிங்கப்பூரில், பொங்கல் தீபாவளியைப் போல பொது விடுமுறை நாள் அல்ல. இருந்தாலும், நன்றி காட்டும் பண்டிகையாக இன்றுவரை பரவலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் விவசாயம் பரவலாக இல்லாவிட்டாலும், நகரச் சூழலுக்கும் இந்தப் பண்டிகை பொருத்தமானதே ஆகும்.
நமக்கு உணவளிக்கும் இயற்கை அன்னையைப் போற்றிக் கொண்டாடி நன்றி கூற பொங்கல் நமக்கு வாய்ப்பளிக்கிறது. குடும்பத்தாருடன் நல்லுறவை வளர்க்கவும் இந்தப் பண்டிகை ஒரு வாய்ப்பாக அமைகிறது.
சிங்கப்பூரில், பொங்கல் கொண்டாட்டத்தின்போது, லிட்டில் இந்தியா முழுவதும் கோலாகலமாகக் காட்சிதரும். இந்திய மரபுடைமை நிலையம், லிட்டில் இந்தியா மரபுடைமை மற்றும் கடைக்காரர்கள் சங்கத்துடன் கூட்டிணைந்து, பொங்கல் திருவிழாவைக் கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யும்.
நகரச் சூழலில் பொங்கல்
நீங்கள் கற்றுக் கொண்டவற்றை யோசித்துப் பார்த்து, நண்பர்களுடன் அல்லது ஆசிரியருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.